சனி, 4 ஆகஸ்ட், 2012

காவேரி பூம்பட்டினம் - பூம்புகார்

தமிழ்நாடு, நாகை மாவட்டத்தில் உள்ள பூம்புகார் என் மனதை கவர்ந்த இடங்களுள் ஒன்று. மயிலாடுதுறையில் இருந்து 15 கீமீ இருக்கும். சிதம்பரத்தில் இருந்து 35 கீமீ இருக்கும். 


பண்டைய தமிழ்நாட்டில் மிக முக்கியமான துறைமுகமாக இருந்து இருக்கிறது. சோழ நாட்டை சேர்ந்த இந்த ஊர், காவேரி பூம்பட்டினம் எனவும் அழைக்கப் படுகிறது. பூம்புகார் - மருவூர்பாக்கம் என்றும் சொல்லப் பட்டு இருக்கிறது. 


பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந்த பூம்புகார் என்னும் சிறிய நகரம். வரலாற்று மற்றும் புவியியல் ஆய்வுகள் இன்னமும் தேவை என பல அறிவியில் அறிஞர்கள் கூறிவருகிறார்கள்.  


சில ஆண்டுகளுக்கு முன்பு நான் சென்ற பார்த்த பொழுது எடுத்த புகைப் படங்களை உங்கள் பார்வைக்கு....கலைஞர் முதல்வராக இருந்த பொழுது 1973 ஆம் ஆண்டு பூம்புகார் புதுபிக்கப் பட்டு, சுற்றுலா தளமாக மெருகு ஊட்டப்பட்டது. 


அருங்காட்சியகம்


கோவலன் கண்ணகி









பூம்புகார் கடற்கரை




மிக அழகான நீண்ட கடற்கரையும், நல்ல உணவகங்களும் இருக்கின்றன....


மயிலாடுதுறையில் இருந்து நிறைய பேருந்துகள் சென்று வருகிறது. 


பூம்புகார் அரசு கல்லூரி, மற்றும் மேலையூர் சீனிவாசா மேல்நிலை பள்ளியும் அருகே உள்ளன. 


நாகை மாவட்டம் சென்றால் நீங்கள் அவசியம் செல்ல வேண்டிய ஊர்....



http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81)


சிலப்பதிக்காரத்தில் உள்ள காவேரி பூம்பட்டினத்தை, கோவலன், கண்ணகி, மாதவி வாழ்ந்த வரலாற்றை அவசியம் தெரிந்த கொள்ள வேண்டிய ஊர் காவேரி பூம்பட்டினம்....இவர்கள் அனைவருக்கும் அங்கே சிலை வைக்கப் பட்டு இருக்கிறது....

3 கருத்துகள்:

  1. மேலையூர் சீனிவாசா மேல்நிலைப்பள்ளி 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை தம் பிள்ளைகளுக்கு நல்ல கல்வி அளிக்க விரும்பும் நடுத்தர குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு அந்த வட்டாரத்தில் அமைந்த ஒரு நல்ல பள்ளி. ஓரளவு நல்ல தரமான கல்வி, நல் ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடு கற்றுக்கொடுக்கும் பள்ளியாக இருந்தது. இப்போதய நிலை பற்றி தெரியவில்லை. நிச்சயம் நல்ல தரத்துடன் வளர்ந்து இருக்கும் என எண்ணுகிறேன். பூம்புகார் அருகில் உள்ள வானகிரி, கீழபெரும்பள்ளம், மேலபெரும்பள்ளம் மற்றும் மேலையுர் காவிரி கரையில் இருந்த பிள்ளையார் கோவில், அதன் அருகில் ஒரு பனைமரப்பாலம், மேலையுர் பிரியாவிடங்கேஸ்வரர் கோவில், நான் 5 ஆண்டுகள் சீரோடும்!! சிறப்போடும்!!!? குப்பை கொட்டிய ராமலிங்கம் மாணவர் விடுதி, அதன் பொறுப்பாளராக இருந்த கண்டிப்பான நல் உள்ளம் கொண்ட திரு.எம் ஆர் ஆசிரியர் அவர்கள் எல்லாம் அடிக்கடி என் நினைவுக்கு வரும். இந்த பதிவை பார்த்தவுடன் ஒரே FLASHBACK FEELINGS தான்.. காலம் அனைத்தையும் வெள்ளமாக அடித்து சென்றுவிடும் அல்லவா??

    பதிலளிநீக்கு
  2. அட எங்க ஊரு!! பகிர்வுக்கு நன்றி ஐயா:)

    பதிலளிநீக்கு
  3. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை கண்டுகொண்டோம். நன்றி.

    பதிலளிநீக்கு