சென்ற
வாரத்தில், என் தோழி ஒருத்தியைப் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சந்தித்தேன்.. அவரைச்
சந்தித்திருக்கக் கூடாது
தான்… என்ன
செய்வது!
விதி வலிது
அன்றோ!
வழக்கமான, நலம்
அறிதலுக்கு பின்
உரையாடியவை:
தோழி: என்னமோ போங்க! தமிழு! தமிழுன்னு தமிழ் கிளாசுக்குக் கூட்டிட்டுப் போறாங்க! ஏங்க! நீங்களே சொல்லுங்க! இதுக
(தம் குழந்தைகளை எவ்வளவு அன்பாக
அழைக்கிறார் பாருங்கள்!)
தமிழ் படிச்சு இந்த ஊர்ல
என்ன பன்னப்
போறாங்க! டான்ஸ் கிளாசுக்குப் போனா, நல்லா டான்ஸ் ஆடிப் பழகலாம். உடம்பும் Slim ஆக இருக்கும்.
நான்: ஏன் அப்படி சொல்றே! நம் மொழி தமிழ் தானே! அதை மறக்கலாமா! உனக்கும் எனக்கும் உள்ள ஒரே உறவு இது தானே! தமிழுக்கு Language Credit வாங்க முயல்வதாக தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் கூறினார்களே!
தோழி: சரி, சரி! நீ பேசாமா தமிழையே கல்யாணம் கட்டியிருக்கலாம்!
நான்: திருமணம் என்ற உறவு திருமணத்திற்குப் பின் தான் உள்ளம் சார்ந்தது! ஆனால் எம் மொழி, நான் கருவறையிலேயே இருக்கும் போதே, என் உணர்வோடு கலந்து விட்டதே!
இப்படியெல்லாம் கூறிக் கொண்டிருந்தாலும், என் உள்ளம் இங்கு உள்ள தமிழர்கள் தமிழ்க் கல்விக்காக என்ற செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பதிவு செய்யவே இப் பதிவு.
என்னை வியப்பில் ஆழ்த்தும் பல விடயங்களில் ஒன்று, மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஒரு மொழி தன் மீது திணிக்கப்பட்ட சமூக, அரசியல் மற்றும் இயற்கை சார்ந்த அத்தனை மாற்றங்களுக்கும் ஈடுகொடுத்து இன்னும் உயிர்ப்போடு இருப்பது தான்.
ஏனென்றால் உலக மொழிகளில் பல காலவெள்ளத்தில் கரைந்து போய் விட்டதாகப் படித்துள்ளோம்.
தொன்மையான மொழிகள் பல சமுதாய மாற்றங்களினால் சிதைந்து போய் விட்டதைப் பார்த்திருக்கிறோம்.. “தேவமொழி”
என பிதற்றித் திரிபவர்கள் கூட
தம் கணவன் / மனைவியிடம் கூட அத் தேவ
மொழியைப் பேசுவது கூட இல்லை.
கடவுளிடம் இரகசியம் பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள். இது போன்ற மொழிக் குப்பைகளுக்கிடையில், காலங்காலமாக,
தமிழ் உயிர்ப்புடன் இருந்து வருகிறது என்றால் அது தன் இளமைப் பருவத்திலேயே எவ்வளவு செம்மைப்படுத்தப்பட்ட மொழியாக இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கும் போது வியப்புதான் மேலிடுகிறது
இச்
சிறப்பு மிக்க
தமிழை அடுத்த
தலை முறைக்கு எடுத்தச் செல்ல
வேண்டிய கடமை
புலம் பெயர்ந்தோருக்கு உள்ளது.
ஏனெனில்,1990ஆம்
ஆண்டிற்கு முன்
புலம் பெயர்ந்த தமிழ்க் குடும்பத்தைச் சார்ந்த குழந்தைகளில் பெரும்பாலானோர் தமிழில் சரியாக எழுதத்
தெரியாது.
“தமிழ் கொஞ்சம் கொஞ்சம் தெரியும்” என்று கொஞ்சுகிறார்கள். இதை உணர்ந்த
அமெரிக்கத் தமிழர்கள் ஆங்காங்கே வார
இறுதி தமிழ்ப் பள்ளி வகுப்புகள் தொடங்கினர்.
இவ்
விதைக்குள் தான்
எத்தனை மரங்கள்!
இப்
பள்ளிகளில் ஆசிரியர்களாகச் செயல்பாட்டவர்களில் பெரும்பாலனோர்,
பல்கலைக் கழகப்
பேராசிரியர்கள், அறிவியல் அறிஞர்கள், கணினி
வல்லுனர்கள் ஆகியோரே!
காலம்
செல்லச் செல்ல,
இவ்வாசிரியர்கள் கீழ்க்
கண்ட இடையூறுகளைச் சந்தித்தனர்.
- ·தமிழ்ப் பாடங்கள் அமெரிக்க நாட்டுச் சூழலுக்கு பொருத்தமாய் இல்லாதது. இப் பாடங்கள், சிங்கப்பூரிலிருந்தோ, தமிழ் நாட்டிலிருந்தோ புத்தகங்களை வரவழைத்து அதைப் பயிற்றுவித்தனர். பாடங்கள் தரமற்றைவாய் இருந்தது
- தமிழைக் கற்றாலும், சபேனீசு (Sapnish), இலத்தின் மொழியைப் போல இரண்டாவது மொழியாக அரசாங்க அங்கீகாரம் இல்லாதது.
- தமிழ்ப் பள்ளிகளுக்கிடையே செயல் திட்டங்கள் பற்றிய கருத்துப் பரிமாற்றமின்மை
இதை
உணர்ந்த அமெரிக்காவில் தமிழ்ச்சங்கங்கள், மற்றும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவை செயல்பாடுகளில் தொடர்ந்து ஆர்வத்துடன் செயல்பட்டுவரும் அன்பர்கள் சேர்ந்து “அமெரிக்கத் தமிழ்க்கல்விக் கழகம்
(American Tamil Academy)” என்ற பெயரில் இலாபநோக்கற்ற கல்வி
அமைப்பொன்றை 2009 ஆம்
தொடங்கினார்கள். இதுவரை 29 தமிழ்ப் பள்ளிகள் இக் கழகத்தில் உறுப்பினர்களாக உள்ளது என்பது இனிப்பு.
சரி தொடங்கிவிட்டால் போதுமா? மூன்று ஆண்டுகள் ஓடி விட்டனவே, என்ன செய்தார்கள் என்று திரும்பிப் பார்த்தால், பல செயற்கரிய செயல்களைச் செய்துள்ளனர். சிலது மட்டும் கீழே:
- · தரமானப் பாடங்களை நிலை வாரியாகத் தாங்களே தயாரித்தது.
- · கடந்த ஆண்டில் பயன் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை சற்றொப்ப இரண்டாயிரம். இவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர்களின் எண்ணிக்கை இருநூறு. தமிழ்ப் பள்ளிகளுக்கு வழிகாட்டியாகச் செயல்பாட்டமை
- “களஞ்சியம்” என்ற காலாண்டு இதழ் ஒன்றை வெளியிட்டமை. இதில், தமிழ்ப் பள்ளிச் செய்திகள், குழந்தைகளின் படைப்புகள் போன்றவைகளே இடம் பெறுகிறது.
மேலும்
இந் நாட்டில்,
பயிலும் குழந்தைகள் மொழி மதிப்பீட்டுப் புள்ளியைப் (Language Credit) பெற வேண்டிய சூழலுக்கு ஆட்படுகிறார்கள். ஆகவே, அதனைப்
பெற முயல்வதுதான் இவர்களது இலக்கு
என்று இவ்வமைப்பினர் கூறும் போது,
தமிழ், அமெரிக்காவில் செத்தா போய்விடும் எனத் தோன்றுகிறது.
Best!
பதிலளிநீக்குபள்ளியில் தமிழுக்கும் language credit வாங்க முடியும்;
மகிழ்வூட்டும் நல்ல செய்தி.
பதிலளிநீக்குஇம்மாதிரி செய்திகளைப் படித்தேனும் இங்குள்ள தமிழர்கள் தமிழுணர்வு பெறவேண்டும்.
மிக்க நன்றி.
மகிழ்வூட்டும் நல்ல செய்தி.
பதிலளிநீக்குஇம்மாதிரி செய்திகளைப் படித்தேனும் இங்குள்ள தமிழர்கள் தமிழுணர்வு பெறவேண்டும்.
மிக்க நன்றி.
மகிழ்வூட்டும் நல்ல செய்தி.
பதிலளிநீக்குஇம்மாதிரி செய்திகளைப் படித்தேனும் இங்குள்ள தமிழர்கள் தமிழுணர்வு பெறவேண்டும்.
மிக்க நன்றி.
இவ்வமைப்பினர், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையுடன் கை கோர்த்துக் கொண்டு, தமிழையும் தமிழினத்தையும் முன்னெடுத்துச் செய்வதைப் பார்க்கும் போது வருங்காலத்தில், “தமிழினம்” இம் மண்ணில் ஓர் பெரும் சக்தியாக மாறும் என்பதி ஐயமில்லை
பதிலளிநீக்குஅருமையான பகிர்வு.
உலகுபரவிவாழும் தமிழர்கள் தங்களைப்போலத் தாம் வாழும் பகுதியில் தமிழின் நிலையை இதுபோல பதிவு செய்வது காலத்தின் தேவை.
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு.
பதிலளிநீக்குஅமெரிக்கத் தமிழ்க்கல்விக்கழகம் பற்றிய பக்றுளியின் பதிவுக்கு மனமார்ந்த நன்றிகள்.
பதிலளிநீக்குசில ஆண்டுகள் முயற்சியிலேயே அமெரிக்கத் தமிழ்க்கல்விக்கழகம் (அ.த.க)சார்பாக பெரும் செயல்பாடுகள் நிகழ்ந்தமைக்கு, பல தமிழர்கள் ”தமிழ்க்கல்வி வளர்த்தல்” என்ற நோக்கில் இணைந்ததும், ஒற்றுமையாக செயல்பட்டதுமே காரணங்கள்.
பேரவை வெள்ளிவிழா மையக்கருத்தும் “தமிழால் இணைவோம், செயலால் வெல்வோம்” என்பதுதான். மேலும் விவரமறிய amtaac.org என்ற இணையதளத்திற்கு சென்று பாருங்கள்.
தமிழர் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் தமிழ் மக்கள் தமிழ்மொழிக்கல்வியை அடுத்தடுத்து வரும் தலைமுறைகளுக்கு சொல்லிக்கொடுக்க ஏற்பாடு செய்வது மிகப்பெரிய அளவில் நடந்திடவேண்டும். அந்நாட்டு பள்ளிகளிலும், கல்லூரி/பல்கலைக்கழகங்களிலும் தமிழ்மொழி பயிற்றுவிக்கப்படலும், மதிப்பீடு பெறும் அங்கீகாரமும் பெற்றாகவேண்டும்.
இல்லையேல் இந்தத்தலைமுறையுடன் தமிழ் முடிவது உறுதி.