தமிழன் என்றோர் இனமுண்டு தனியே
அவர்க்கோர் குணமுண்டு". என்பார் நாமக்கல் கவிஞர்.
அவர்க்கோர் குணமுண்டு". என்பார் நாமக்கல் கவிஞர்.
“தனி“ என்பது நம்மை நாமே தனிமைப் படுத்திக்கொள்வதல்ல..
நம் மரபுகளைத் தனித்துவப்படுத்திக் காட்டுவது!
நம் மரபுகளைத் தனித்துவப்படுத்திக் காட்டுவது!
தமிழர்கள்
எங்கு வாழ்ந்தாலும் தமிழையும், தம் கலைகளையும் மறந்தவனில்லை. அவ்வகையில், புலம் பெயர்ந்தாலும், அமெரிக்கத் தமிழர்கள்
“வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை என்ற ஒரு குடையின் கீழ் ஒன்றிணைந்து, உலகெங்கும்
வாழும் தமிழினத்திற்கு குரல் கொடுத்து வருதல் கண்கூடு.
இந்த
அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் தமிழ்விழா அமெரிக்காவின் ஏதேனும் ஒரு மாநிலத்தில்
நடைபெறுவது வழக்கம். தமிழகத்திலிருந்து அறிஞர்
பெருமக்கள், கலைஞர்கள், திரைக்கலைஞர்கள் பலர் அழைக்கப்பெற்று இந்த விழாவினை
மிகச்சிறப்பாக நடத்துவது அமெரிக்காவில் வாழும் தமிழர்களின் விருப்பமாகும். அண்மையில்
இப்பேரவை தம் வெள்ளி விழாவினை வெற்றிகரமாக அமெரிக்கத் தலை நகரில் கொண்டாடி மகிழ்ந்தது.
குறிப்பாக, தமிழத்தில் கூட அரிதாகக் காணப்படும் கலைகளை இப் பேரவையினர் அவ்வல்லுனர்களை
இங்கு அழைந்து வந்து அவர்களை ஊக்கப்படுத்துவதும், அக் கலை அழிந்து போகாமல் இருக்க முயற்சி
செய்வதும் இவர்களது தலையாயப் பணி.
சிலம்பாட்டம்: ஏறக்குறைய
20 ஆண்டுகளுக்கு தமிழகத்து கிராமியக் திருவிழாக்களில் சிலம்பாட்டம் இருக்கும். இளங்காளைகள் பெண்களைக் கவர்வதற்காகவே அக் கலையில்
தேர்ச்சி பெற முயற்சிப்பர். ஆனால் இந் நிலை இப்போது மாறிவிட்டது. சிலம்பாட்டம் என்றால் என்ன என்று கேட்கத் தொடங்கிவிட்டனர். ஆனால் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையோ, 2009
ஆம் ஆண்டு தமிழகத்திலிருந்து ஜோதி கண்ணன் என்ற சிலம்பாட்டக் கலைஞரை அழைந்து வந்து,
அக் கலைஞரை பெருமைப் படுத்தியது மட்டுமன்றி, அமெரிக்காவில் உள்ள தமிழ்ச் சங்கங்களுக்கு
அவரை இங்குள்ள சிறுவ சிறுமியர்களுக்கு அக் கலையைப் பயிற்றுவித்தனர். அவர் பேரவையில் நிகழ்த்திய நிகழ்ச்சி இதோ…
தெருக்கூத்து: நெஞ்சை
அள்ளும் நிகழ்த்து கலைகளுள் தெருக்கூத்தும் ஒன்று, கூத்துக் கலை. இக் கூத்துக் கலை தமிழகத்தில் தென் மாவட்டங்களிலும்,
வட, தென்னாற்காடு மாவட்டங்களில் அதிகமாகக் காணப்பட்ட இக் கலை இப் போது அழிந்தே போய்
விட்ட்து எனலாம். கதைக் கருவாக, இதிகாசக் கதைகளையோ,
மதுரை வீரன், நல்ல தங்கள் போன்ற நாட்டுப் புறக் கதைகளையவோ கதைக் கருவாக எடுத்துக் கொண்டு
இரவு முழுவதும் நடக்கும் இக் கூத்தை கிராமத்தினர் மிகவும் விரும்பிப் பார்ப்பர். இவ்வரிய
கூத்தை பேரவையினர், 2010 ஆம் ஆண்டு கனெடிக்ட் மாகாணத்தில் நடைபெற்ற விழாவில் பாண்டிச்
சேரி பல்கலைக் கழகத்திலிருந்து நாடகத்துறையைச் சார்ந்தவர்களை அழைந்து வந்து நிகழ்ச்சியை
நடத்தினர். அந் நிகழ்ச்சியைக் காணுங்களேன்
தப்பாட்டம்:
‘ தப்பாட்டம்’
என்ற பெயரிலிருந்தாலும், சரியான ஆட்டமாக நிகழ்த்தப் பெறும் நாட்டுப் புறக் கலை இது. பொதுவாக, இக்கலையை தமிழகத்தில் இறந்தவர்களின் வீட்டிலிருந்து
எழுப்பப்படும் ஒலியாக இருப்பதனால், சாவைக் கூட மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்கிறானா என
ஐயப்படத் தோன்றுகிறது. எது எவ்வாறாயினும்,
இவ்வொலியைக் கேட்ட மாத்திரத்தில் ஆடாத காலும் ஆடத் தொடங்கிவிடும் என்பதே உண்மை. கடந்த 2011 ஆம் ஆண்டு பேரவை தமிழகத்திலிருந்து
சக்தி நாட்டியக் குழுவை அழைந்து வந்து பேரவையில் மிகப் பெரிய நிகழ்ச்சியை நடத்தினர். தமிழர்கள் மட்டுமன்றி, சார்லஸ் நகரத்தில் உள்ள அமெரிக்கர்கள்
இந் நிகழ்ச்சியைக் காண விரும்பியதால் பேரவையினர், விழா முடிந்த அடுத்த நாள், சார்லஸ்
நகரத்தில் மீண்டும் ஒரு நிகழ்ச்சிகு ஏற்பாடு செய்தார்கள் என்றால் இவ்வரிய கலைக்கு கரையேது. பேரவையின் போது எடுக்கப்பட்ட காணொளி இதோ…
சில
நூற்றாண்டுகள் மட்டுமே வரலாற்றுப் பதிவுகள் கொண்ட அமெரிக்கர்களும், சப்பானியர்களும், தங்கள்
வரலாற்றையும்,கலைகளையும் ஆவணப்படுத்தியுள்ளார்கள்.
ஆனால்,
புரியாத மொழிக்கும், அறியாத செயலுக்கும் நம்மில் சிலர் அடிமைப்பட்டும் நம்மவர்களையே
குறை குறிக் கொண்டும்,
“தேடிச் சோறு நிதம் தின்று
பலசின்னஞ் சிறு கதைகள் பேசி”
பலசின்னஞ் சிறு கதைகள் பேசி”
வேடிக்கை மனிதர் போல்
வீழ்வது தான் வேதனையளிக்கிறது.
ஒரு வேளை, தமிழகத்தில் கலைகள் மறந்து போனாலும் போனாலும் வட அமெரிக்கத் தமிழ் மக்களும், பேரவையும் மறவாது இருப்பர்
என்பது மட்டும் உறுதி
நல்ல முயற்சி. வட அமெரிக்கத் தமிழர்களின் சேவை பாராட்டுக்குரியது.
பதிலளிநீக்குதோழி தங்கள் தமிழ் பணி தொடரட்டும். குறியீட்டு முறையில் பொருத்தமாகத் தலைப்பிட்டுள்ளீர்கள்.ஆனால் பஃறுளி என்பதே சரி.
பதிலளிநீக்குதோழி பொருத்தமாகத் தலைப்பிட்டுள்ளீர்கள்.ஆனால் பஃறுளி என்பதே சரி.
பதிலளிநீக்குபஃறுளி என்பதே சரி தோழி.
பதிலளிநீக்குதமிழர் பண்பாடு, கலை, இலக்கியம் இவைகளின் மேல் கட்டப்பட்டதுதான் பெட்னா என்ற வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை.
பதிலளிநீக்குகட்டுரைக்கு நன்றி
நட்சத்திர வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமகிழ்ச்சி. வளரட்டும் கலைகள்.
ஒரு பதிவு மட்டும் எழுதியிருக்கும் அன்பர் நட்சத்திர வாரத்தில் !!
பதிலளிநீக்குகுறைந்தது மூன்று பதிவுகளாவது எழுதியிருந்தால்தான் தமிழ்மணத்தில் பதிவைச் சேர்க்கவே முடியும்.
என்ன நடக்கிறது தமிழ்மணத்தில்?
ஒரு வேளை, தமிழகத்தில் கலைகள் மறந்து போனாலும் போனாலும் வட அமெரிக்கத் தமிழ் மக்களும், பேரவையும் மறவாது இருப்பர் என்பது மட்டும் உறுதி//
பதிலளிநீக்குநட்சத்திர வாழ்த்துகள்.
மகிழ்ச்சி. வளரட்டும் கலைகள்
வட அமெரிக்கத் தமிழர்களின் சேவை பாராட்டுக்குரியது.
அருமையான காணொளிகளை
இணைத்துக் கொடுத்தமைக்கும்
மனமார்ந்த நன்றி